email: vadamarachy@gmail.com

 

உங்கள் நிறை சரியா?

நிறை   றா. கிலோ

உயரம் அங். செ.மீ

 

குறிப்புகள்:

BMI=18.5-25 ஐ மேற்குலக நாடுகளில் ஆரோக்கிய நிலையாக கொள்கிறார்கள்.
எமது உடல் அமைப்பு, உணவு பழக்கம், வாழ்க்கை முறை வேறு பட்டது.
இதனால் 23-25 BMI உள்ள நம்மவர்கள் ஆரோக்கியம் அற்றவர்களாக உள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள
15 சுகாதார அமைப்புகள்
18.5-23
ஐ ஆரோக்கிய BMI குறியாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் விபரங்களுக்கு

ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவு, அளவான உடற்பயிற்சி போன்றவை மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கிய வாழ்விற்க்கு முக்கிய காரணிகள்
●   ஆரோக்கிய உணவு
●   பருவநிலை, சுற்றுச்சூழல்
●   உடற் பயிற்சி
●   மன உளைச்சல், உணர்சிவசப்படல்

ஆரோக்கிய உணவு

நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு. ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள்

●   தேவையான சத்துக்கள் நிறைந்தது
●   அளவோடு உண்பது
●   நம் உடல் நிலைக்கு ஏற்றது

உடல் ஆரோக்கியத்திற்க்கு பல வகை சத்துகள் கொண்ட உணவுகளை உட்கொள்வது அவசியம். எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்று கவனம் செலுத்துவதோடு என்ன விகித்த்தில் சத்துகளை சேர்க்கவேண்டும் என்பதையும் அவதானிக்கவேண்டும். இதற்க்கு உணவு கோபுரத்தை (Food Pyramid) பயன் படுத்தலாம். நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம்.

அதிகப்படியான கலோரி உணவை உண்டு விட்டு அதிக உடலுழைப்பைச் செலுத்தாத போது இந்த கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகின்றன. இப்படிச் சேரும் கொழுப்பே ஆரோக்கியத்துக்கு எமனாக மாறிவிடுகிறது. முதலில் உயரத்திற்கேற்ப நிறை உள்ளதா என அறியவேண்டும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள். உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இது 18.5 க்கும் 23 க்கும் இடையில் இருக்க வேண்டும். இது 23 த் தாண்டினால் உடல் எடையை குறைக்க வேண்டும்.

உடல்நிலை குறைந்தவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள், சேர்க்க வேண்டிய உணவுகள் எவை என அறிந்து தங்கள் உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். இரத்தஅழுத்தம், நீரழிவு, என பல நோய்களுக்கு மருந்தோடு உகந்த உணவும் அவசியம்.
மேலும் விபரங்களுக்கு ஆரோக்கிய உணவு பார்க்கவும்.



TOP

உடல் பருமன்

பாலுக்கு மைலோ வேண்டும் என்று கேட்பவர்கள் உள்ள உலகில்தான் கஞ்சிக்கு உப்பு வேண்டும் என்பவர்களும் உள்ளார்கள். குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பது இன்று ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகிவிட்டது. அதே உலகில் தகுந்த சத்து உணவு இல்லாததால் குழந்தைகள் நிறை குறைந்து நோயுறுவதும் ஒரு சர்வதேசப் பிரச்சனைதான். உலகயுத்த காலத்தில் பாண் இல்லை மக்கள் -*அங்கலாய்த்த பொழுது கேக்கை உண்பதுதானே ஏன்று கூறினார்களாம் அரச குடும்ப குழந்தைகள். எவ்வளவு யதார்த்தம் ஆகிவிட்டது.
மேலும் விபரங்களுக்கு உடல் பருமன் பார்க்கவும்.