email: vadamarachy@gmail.com

கணணி

 

கணணிப்பராமரிப்பு

COMPUTER MAINTENANCE

எந்த சக்தி கூடிய கணணி ஆனாலும் அதை ஒழுங்காக பராமரிக்காவிடில், அத‌ன் செய‌ல்பாடும் வேகமும் குறை‌ந்து‌ விடு‌ம். இதை தவிர்க்க கீழ்காணும் பராமரிப்புகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

  • கணணியை தொடர்ச்சியாக பாவிக்காமல் இடையில் நிறுத்தி க‌ணணி‌க்கு ஓய்வு கொடு‌ங்க‌ள்.
  • குறைந்தது வாரத்திற்க்கு ஒரு முறை RECYCLE BIN ஐ காலி செய்ய வேண்டும்.
  • கணணியில் நீண்ட காலம் நாம் பயன்படுத்தாத புரோக்கிராம் மற்றும் மென்பொருள்களை நீக்கி விடவேண்டும். தேவைய‌ற்ற, பய‌ன்பா‌ட்டி‌ல் இல்லாத கோப்புகளையும் நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள் அல்லது EXTERNAL HARD DISK வெளி வன்வட்டு க்கு மாற்றி விடுங்கள்.
  • C DRIVE இல் உள்ள தற்காலிக கோப்புகளை அழித்து விடுங்கள். தற்காலிக இணைய கோப்புகளை அழித்து விடுங்கள். மாதம் ஒரு முறை கண்ணியில் UTILITY இல் உள்ள DISK CLEANUP செய்யுங்கள். தேவை ஏற்படின் DISK DEFRAGMENTATION செய்யுங்கள். (குறிப்பு 1)
  • (SPYWARE) உளவுநிரல் எனப்படும் ரகசியங்களை திருடும் மென்பொருள்களில் இருந்து கணணியை பாதுகாத்து கொள்ளவேண்டும். இதற்கான மென்பொருள் தொகுப்புக்கள், WINDOWS உடன் கிடைக்கின்றன.
  • தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்ட்டி வைரஸ் SCAN ஐ இயக்கி, கணணி கோப்பறைகள், DRIVE களில் உள்ள நச்சுநிரல்களை (VIROUS) நீக்க வேண்டும். ஒவ்வொரு முறை தரவிறக்கம் செய்யும் போதும், VIRUS SCAN செய்ய வேண்டும். இன்னொருவர் PENDRIVE இல் தரும் கோப்புகளை உங்கள் கணணியில் நகலொட்ட முன்(COPY PASTE) VIRUS SCAN செய்ய வேண்டும்.
  • UPS மூலமே கணணியை இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கணணி திடீரென CRASH ஆவதில் இருந்து தப்பிக்கும். உபகரணங்களை கணணியுடன் இணைக்கும் போது கவனமாக பொருத்த வேண்டும். PEN DRIVE ஐ நிப்பாட்டாமல் பிடுங்க கூடாது.
  • ஆண்டுக்கு ஒரு முறையோ கண்ணிப் பெட்டி, மற்றும் MONITOR ஐ திறந்து அதில் சேர்ந்திருக்கும் மெல்லிய தூசுக்களை அப்புறப்படுத்துங்கள். கண்ணி சூடேறாமல் இருக்க கா‌ற்றோ‌ட்டம் இரு‌க்க வே‌ண்டு‌ம். கண்ணியை சுற்றி வெளி இருக்க வேண்டும்.
  • முறைப்படியே கணணியை SHUT DOWN செய்ய வேண்டும். ON/OFF SWITCH ஐ பயன்படுத்த வேண்டாம். கணணி அதிக சூடு ஆனால் மின் விசிறியை அதற்க்கும் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், கணணிக்கும் ஓய்வு கொடுங்கள்.

குறிப்பு 1: START ► SEARCH BOX இல் “%TEMP%” ஐ

தட்டச்சிட்டிற்று [ENTER] விசையை அழுத்த C DRIVE இல் உள்ள தற்காலிக கோப்புகள் பட்டியல் தோன்றும். அதை அழிக்கவும்.

START ► ALL-PROGRAMS ► ACCESSARIES ► SYSTEM-TOOLS இல் DISK CLEANUP, DISK DEFRAGMENTATION மென்பொருள்கள் உண்டு.

START என்பது கணணித்திரையில் இடது பக்க கீழ் மூலையில உள்ள படவுரு

UPS-UNITERUPTED POWER SUPPLY என்பது அதில் உள்ள மின்கல சக்தியை எதிர்மின்மாற்றி மூலம் 230 V ஆக மாற்றி சிறிது நேரம் கணணிக்கு மின் சக்தி வழங்கும்.

 

TOP

COMPUTER

 

விசைப்பலகை குறியீட்டின் பெயர்கள்

NAMES OF KEYBOAD SYMBOLS

~tilde, the wave-shaped symbol
`backtick, backquote, grave accent
!exclamation
@at, symbol
#hash, pound
$dollar
£sterling pound
%percent
^caret
&ampersand, and
*star, asterisk
_underscore
+plus
-minus, hyphen, dash
=equals
(opening parenthesis, left bracket
)closing parenthesis, right bracket
{opening brace, left curly bracket
}closing brace, right curly bracket
[opening bracket, left square bracket
]closing bracket, right square bracket
|pipe, vertical bar
/slash, forward slash
\backslash
:colon
;semicolon
"double quote
'single quote, apostrophe
less than, left angle bracket
greater than, right angle bracket
,comma
.full stop, period, dot
?question mark

 

TOP