email: vadamarachy@gmail.com

 

கணணியில் தமிழ் பாவனை

 

ஒற்றை குறியீடு என்றால் என்ன?

ஒற்றை குறியீடு எந்த இயங்குதளம் ஆயினும், எந்த நிரல் ஆயினும், எந்த மொழி ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்குகிறது. பிற மொழி பாவனைக்கு இது மிகவும் இன்றி அமையாதது. முன்னணி வன்பொருள், மென்பொருள் தயாரிப்பாளர்கள் ஒற்றை குறியீட்டை பின்பற்றுகிறார்கள்.

தமிழ் எழுத்துக்களுக்கு 0B80 to 0BFF(2944 to 3071) என
128 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வொதுக்கீடு அட்டவணையை பார்க்க

தமிழ் பத்திரிகை நிறுவனங்கள் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை பாவித்தன. வேறு கணணியில் உருவாக்கிய பாமினியில் உள்ள ஆவணத்தை எனது கணணியில் பாமினி எழுத்துரு இருந்தால் மாத்திரமே பார்க்கமுடியும். உலகளாவிய பாவனைக்கு இது தடையாக இருந்தது. ஒற்றை குறியீடு எழுத்துருவில் உருவாக்கப்பட்ட ஆவணம் எந்த கணணியிலும் பார்க்க முடியும். அத்துடன் மின்னஞ்சலில், GOOGLE SEARCH இல் தமிழிலே தட்டச்சிட முடியும். இணையத்தில் தமிழ் பக்கங்களை தேடுவதற்க்கு இது இன்றி அமையாத்து.

 

தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் விசைப் பலகை நிறுவப்பட வேண்டும். விசைப்பலகை என்பது ஒரு மென் பொருளே. ஆங்கில விசைப்பலகை தான் புதிய கணணியில் நிறுவப்பட்டிருக்கும். பல மொழி விசைப் பலகை ஒரே கணணியில் நிறுவலாம். ஆங்கில, தமிழ் விசைப்பலகை இரண்டுமே இருந்தால் ஒரு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாறுவதற்க்கு [Alt} + [Shift] ஐ அழுத்தவும்.

தமிழ் விசைப்பலகை நிறுவுவது எப்படி?
இதற்க்கு பல வழிகள் உண்டு. WINDOWS ஐ பாவித்து எப்படி நிறுவலாம் என அறிய விபரங்களை அழுத்தவும்.

தமிழ் விசைப்பலகை படத்தை பார்க்க TOP ஐ அழுத்தவும்.

நன்றி BROTHERSOFT.COM

தமிழ் விசைப்பலகையை கணணித்திரையில் தோற்றுவிக்கலாம். தமிழில் தட்டச்சிட இது உதவியாக இருக்கும். இதை தோற்றுவிக்க:

Start ► All Programs ► Accessories ► Ease of Access ► On-Screen Keyboard

 

 

TOP
TAMIL UNICODE CONVERTER

தமிழ் ஒற்றை குறியீடுகள் பாவனைக்கு வர முன்பே பத்திரிகை, அச்சக துறையில் தமிழ் கணணிப்பாவனை பரவலாகிவிட்டது. அவர்களில் பலர் தாம் உருவாக்கிய தமிழ் எழுத்துகளையே பாவித்தனர். முரசொலி, விகடன், தினபூமி, நக்கீரன், தினமணி, தினத்தந்தி, முரசொலி, மயிலை, தினகரன், அஞ்சல், பாமினி, கவிப்பிரியா, TSCll, TAM, TAB, போன்றவை அவற்றில் சில.

கணணிப்பாவனை பொது மக்களிடையே பிரபலமான பொழுது ஒவ்வொருவரும் வெவ்வேறு தமிழ் எழுத்துகளை பாவித்தனர். இதனால் ஆவணங்களை பரிமாற்றம் செய்வதில் சிக்கல் இருந்தது.

இணையதள பாவனை பரவலாக, தமிழ் ஒற்றை குறியீடுகள் இளயதலைமுறை, தகவல தொழில்நுட்ப தொழில் நெறிஞர் இடையே அங்கீகாரம் பெற்றது. பழய தலைமுறை, பத்திரிகை, அச்சக துறை சார்ந்தவர்கள் பழய எழுத்துகளையே இப்போதும் பாவிக்கின்றனர்.

அந்த ஆக்கங்களை பரவலாக வாசிக்கவும், இணைய தளத்தில் சேர்ப்பதற்க்கும் ஒற்றை குறியீடுக்கு மாற்ற வேண்டும். இதனை நிகழ்நிலை தமிழ் எழுத்துரு மாற்றி மூலம் செய்யலாம். இச்சேவை ஆற்றும் இரு இணைய தளங்கள்:

பொங்குதமிழ்         கண்டுபிடி CONVERTER

 

எண் விசைத்தளம் மூலம் தமிழ் எழுத்து

ஒரு மொழிக்கு 128 எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விசைப்பலகை மூலம் 90 (எழுத்து, எண், குற்றியீடு) மாத்திரமே தட்டச்சிட முடியும்.
உ.ம். ¼, ½, ¾, போன்ற குறியீடுகள் நேரடியாக தட்டச்சிட முடியாது.
1½ எழுதுவதற்க்கு பலர் 1 1/2 என எழுதுவார்கள். விசைப்பலகையில் இல்லாத குறியீடுகளை எழுதுவதற்க்கு இரு வழிகள் உண்டு.

  1. WORD/EXCEL இல் MENU►INSERT► SYMBOL மூலம்
    ¼, ½, ¾, போன்ற குறியீடுகளை எழுதலாம்.
  2. ½ க்கு ஒதுக்கப்பட்ட எண் 0189. NUMERICK KEYPAD மூலம் [Alt]+0189 ஐ தட்டச்சிட்டால், கணணித்திரையில் "½" பின்னம் தோன்றும்.

    தமிழில் வருடக்குறியீடு ௵. இதற்க்கு ஒதுக்கப்பட்ட எண் 3061. NUMERICK KEYPAD மூலம். [Alt] + 0365 ஐ தட்டச்சிட்டால், கணணித் திரையில் "௵" எனும் குறியீடு தோன்றும்.

தமிழ் எழுத்துகள், குறியீடுகள், அவற்றிற்க்கு ஒதுக்கப்பட்ட எண் களை அட்டவணை படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் குறியீடுகளை தட்டச்சிட இந்த அட்டவணை மிக உபயோகமானது. இந்த அட்டவணையை பார்ப்பதற்க்கோ அன்றி தரவிறக்கவோ

 

 

TOP