email: vadamarachy@gmail.com

மின்கலன்



மின்கலத்தின் மூன்று முக்கிய பண்புகள் வருமாறு

 
அளவு (SIZE)
D, C, AA, AAA, PP3 சிறிய மின்கலன், பெரிய பேரூந்து மின்கலன்,

 
மின்அழுத்தம் (V-VOLTAGE)
வீட்டு பாவனை பொருள்களில் 1.5V, வாகனங்களில் 12V/24V

 
கொள்ளளவு (aH-CAPACITY)
100 aH மின்கலன் 20 மணித்தியாலத்திற்கு 5a மின்னோட்டம் வழங்கும்

மின்கலங்கள் இருவகைப்படும்.
1   சாதா மின்கலம் (DISPOSABLE BATTERY)
2   மின்னேற்றக்கூடிய மின்கலம் (CHARGEABLE BATTERY)

சாதா மின்கலம்
பாவித்து முடித்தபின் வீசப்படுபவை சாதா மின்கலம். ஆரம்பத்தில் மின் விளக்குகளில் பயன்படுத்தப்பட்டன். இப்பொழுது கைக்கடிகாரம், விளையாட்டுப்பொருள் (TOYS) என பல பொருள்களில் மின்கலங்கள் பாவிக்கப்படுகின்றன.

Batteries

அளவு - SIZE
மின்சாதனங்களை பொறுத்து அதில் பாவிக்கப்படும் மின்கலங்களின்அளவுகள் வேறுபடும்.
வானொலி, மின்விளக்குகளில் D, C, AA ரக மின்கலங்களும்
தொலையியக்கிகளில் (REMOTE CONTROL) AAA ரக மின்கலங்களும்
கைக்கடிகாரங்களில் BUTTON மின்கலங்களும்
பாவிக்கப்படும்


மின்னேற்றக்கூடிய மின்கலம் (CHARGEABLE BATTERY)
இம்மின்கலங்கள் மின்னேற்றிய பின் மீண்டம் பாவிக்க முடியும். ஆரம்பத்தில் இந்த LEAD ACID மின்கலன்கள் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டன். இவை அளவில் பெரியதாகவும் நிறை கூடியதாகவும் இருந்தன.

இப்பொழுது மின்விளக்கு, தொலைபேசி, CAMERA, என பல கருவிகளில் பாவிக்கப்படுகின்றன. புதிய வகை வேதியல் பொருளை அறிமுகப்படுத்தி மின்கலத்தின் அளவை சிறிதாக்க முடிந்தது.

Batteries

அளவு - SIZE
மின்சாதனங்களை பொறுத்து அதில் பாவிக்கப்படும் மின்கலங்களின்அளவுகள் வேறுபடும்.
வானொலி, TOYS, மின்விளக்குகளில் D, C, AA ரக மின்கலங்களும்
CAMERA, கைத்தொலை பேசி தட்டை மின்கலங்களும்
வாகனங்கள், மின்கல வங்கி பெரிய மின்கலங்களும்
பாவிக்கப்படும்

வேதியல் பொருள் - மின்னழுத்தம் - அளவு க்கு இடையே உள்ள தொடர்பு
சாதா மின்கலம் (DISPOSABLE BATTERY)
ZINC-CARBON 1.5V D,C,AA,AAA,PP3
ZINC-CHLORIDE (heavy duty) 1.5V D,C,AA,AAA,PP3
MANGANESE-DIOXIDE (alkaline) 1.5V D,C,AA,AAA,PP3
ZINC, SILVER OXIDE 1.5V S type BUTTON
LITHIUM, SILVER OXIDE 3V S type BUTTON

மின்னேற்றக்கூடிய மின்கலம் (CHARGEABLE BATTERY)
NiCd (NICKEL CADMIUM) sealed 1.2V D,C,AA,AAA,PP3
NiMH (NICKEL METAL HYDRIDE) 1.2V D,C,AA,AAA,PP3
Li-ion (LITHIUM ION) 3.6V D,C,AA,AAA,PP3
LEAD ACID 2V கார், வான், பேரூந்து
LEAD ACID (deep cycle) 2V வேகம் குறைந்த மின்வண்டிகள்
LEAD ACID (sealed)

2V

மேசை மின்விளக்கு, மின் மிதி வண்டி
UPS கணனிக்கு மின் வழங்குபவை
NiCd (NICKEL CADMIUM) unsealed 1.2V மின்கல வங்கி
Li-ion (LITHIUM ION) பெரிது 3.6V மின் கார்

குறிப்பு:
மின்கல வங்கி - இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சினிமா, கடைகளில் மின் ஆக்கிகளை வைத்திருப்பார்கள். செல்பேசி கோபுரங்கள், தானியங்கி தொலைபேசி பரிவர்த்னை அறைகள், தொடர்வண்டி கட்டுப்பாடு அறைகள் மின்வெட்டு நேரங்களிலும் கட்டாயம் இயங்க ழேண்டியவை. பல மினேனேற்றக்கூடிய மின்கலங்களை தொடுத்து வைத்திருப்தே மின்கல வங்கி. மின் சக்தி உள்ள பொழுது மின்கலங்கள் மின்னேற்றப்படும். மின்வெட்டு ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து எதிர் மின்மாற்றி (INVERTER) மூலம் தடையின்றி 230V மின் சக்தி வழங்கும். வீடுகளிலும், கணனி பாவனையாளர்களும் இம்முறையை பயனபடுத்துகிறார்கள். மின்கல வங்கி மின்கலம், மன்னேற்றி, எதிர மின்மாற்றியை கொண்டிருக்கும்.

எதிர் மின்மாற்றி (INVERTER) - பெரிய மின்கலங்களின் மின்னழுத்தம் 12V/24V. மின்கலங்கள் ஒரு திசை மின்னோட்டம் (DC) கொண்டவையாகும். பாவனைப்பொருள்கள் பலவும் 230V மின்னழுத்தம் கொண்ட மாறு திசை மின்னோட்டத்தில் (AC) இயங்குபவை ஆகும். எதிர் மின்மாற்றி 12V/24V மின்னழுத்தம் கொண்ட DC மின்னோட்டத்தை 230V மின்னழுத்தம் கொண்ட AC மின்னோட்டமாக மாற்றும்.

DEPTH OF DISCHARGE (DOD) - காரில் பாவிக்கும் 100 aH மின்கலங்கத்தை எடுத்துக்கொள்வோம். அதன் கொள்ளவ்வு 100 aH ஆக இருந்தாலும் 50 aH மின்சாரத்தை மாத்திரமே வெளிக்கொணர முடியும். இந்த மின்கலங்கத்தின்
DOB 50% எனப்படும். கூடிய DOD கொண்ட மின்கலம் DEEP CYCLE மின்கலம் எனப்படும்.


மின்கலங்களும் அவற்றின் DOD வீதங்களும்
மின்கலம் DOD வீதம் குறிப்பு
LEAD ACID (automotive) upto 50% கார், வான், பேரூந்து
LEAD ACID (deep cycle) upto 80% வேகம் குறைந்த மின்வண்டிகள்
LEAD ACID (sealed) upto 50% மேசை மின்விளக்கு
NiCd (NICKEL CADMIUM) unsealed upto 100% மின்கல வங்கி
Li-ion (LITHIUM ION) பெரிது upto 100% மின் கார்





TOP